» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாப சாவு

வியாழன் 10, அக்டோபர் 2019 4:49:14 PM (IST)

தூத்துக்குடியில் பைக்கில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் மீது, அரசு பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜ் மகன் மணிகண்டன் (26). தனியார் நிறுவன ஊழியரான இவர் இன்று மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் பணிக்குச் சென்று கொண்ருந்தார். போல்டன்புரம் முதல் தெரு, திருச்செந்தூர் ரோடு சந்திப்பில் சென்றபோது சாலையில் இருந்த வேகத்தடையில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற அரசு பஸ் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

மக்கள்Oct 10, 2019 - 06:24:37 PM | Posted IP 173.2*****

அந்த வேகத்தடையில் பள்ளம் உள்ளது , பக்கத்தில் சாக்கடை தேங்கி உள்ளது , மாநகராட்சிக்கு கண் இல்லை ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory