» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்

வியாழன் 10, அக்டோபர் 2019 3:41:04 PM (IST)

தூத்துக்குடியில் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3வது தெருவில் (சிதம்பர நகரில்) இயங்கி வந்த தூத்துக்குடி நகர மின்சார வாரிய (தெற்கு பிரிவு) அலுவலகம் மில்லர்புரம், அன்னை மஹால் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைவார்கள் என டிஒய்எப்ஐ கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாநகர செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலா ஆகியோர்  கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 

தூத்துக்குடி சிதம்பநகர் பகுதியில் மின்வாரிய அலுவலகம் பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்தது. தற்போது அந்த அலுவலகம் திடீரென மில்லர்புரத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் தெற்கு பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீண்டும் அதே இடத்திலேயே மின்வாரிய அலுவலகம்  இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இல்லையெனில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துகுடி மாநகரக்குழு சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory