» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் கணவர் கைவிட்டதால் இளம்பெண் கண்ணீர் : சேர்த்து வைக்கக்கோரி கோட்டாட்சியரிடம் மனு

வியாழன் 10, அக்டோபர் 2019 12:17:29 PM (IST)காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி  இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் உமாமகேஷ்வரி, இவர் தனது உறவினர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் தனது காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி கண்ணீர் விட்டு அழுதார். அவர் வழங்கிய மனுவில், நான் லேப் டெக்னீசியன் படித்து வருகிறேன். எனது ஊருக்கு அடுத்து உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் சிவனைந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜாமூர்த்தி என்பவர் நான் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது பழக்கமானார். இவர் சங்கரன்கோவில் விவசாயத்துறையில் பணியாற்றி வருகிறார். எங்களது பழக்கம் காதலாக மாறியது. 

எனக்கு கடந்த 23.9.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, நாங்கள் சங்கரன்கோவிலில் உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். ஒரு மாதத்தில் எனது வீட்டில் உள்ளவர்களிடம் பேசி உன்னை அழைத்து செல்கிறேன் என ராஜாமூர்த்தி கூறினார். இதனால் நான் எனது வீட்டில் இருந்தேன். கடந்த 4-ம் தேதி நான், எனது தாய் கற்பகம்மாள், மருமகள் முத்துலட்சுமி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜாமூர்த்தியின் சித்தி எங்களை கடுமையாக பேசி மிரட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் ராஜாமூர்த்தி மற்றும் அவரது சித்தியை அழைத்து சென்று விட்டார்.

இதுகுறித்து நான் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தேன். அங்கு எனது புகார் மனு வாங்கவில்லை. எனவே, எனது கணவர் ராஜாமூர்த்தியை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். எனது கணவரையும் மறைத்து வைத்துக்கொண்டு எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிரட்டல் விடுக்கும் அவரது சித்தி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டுராமன், விவசாய சங்க நிர்வாகி ரத்னவேலு உள்ளிட்டோர் இளம்பெண்ணுடன் சென்றனர். 


மக்கள் கருத்து

அருண்Oct 11, 2019 - 02:08:34 AM | Posted IP 162.1*****

ஏன் பெற்றோரை நம்பாம இப்படி தறி கெட்டு திரியுரிங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory