» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் பாய்ந்து ஒருவர் மரணம் : 2 மாடுகளும் பலி - கோவில்பட்டி அருகே சோகம்!!

வியாழன் 10, அக்டோபர் 2019 11:32:58 AM (IST)



கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 2  பசுமாடுகள் பலியாகின.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் சின்னத்துரை(44).  மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் தனது வீட்டின் ஒருபுறம் மாட்டுத் தொழுவம் நடத்தி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல நேற்று மாட்டுத் தொழுவத்தில் 2  பசுமாடுகளை விட்டுவிட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தொழுவத்தில் 2 மாடுகளும் கீழே விழுந்த நிலையில் கிடந்ததைக் கண்ட அவர், மாடுகளை தொட்டுப் பார்த்த போது அவரும் கீழே விழுந்தாராம்.

அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி 2 மாடுகள் மற்றும் சின்னத்துரை இறந்தது தெரியவந்தது. அதையடுத்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் போலீஸார் சின்னத்துரை சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சின்னத்துரைக்கு முத்தலட்சுமி(38) என்ற மனைவியும், மதுமிதா(17), கருப்பசாமி(7), கமலேஷ்(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். இறந்த மாடுகள் வில்லிசேரி கால்நடை மருந்தகத்திற்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory