» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் தமிழக அரசின் புகைப்படக் காட்சி

வியாழன் 10, அக்டோபர் 2019 8:24:23 AM (IST)தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு புகைப்படக் காட்சியினை ஏரளாமான பொது மக்கள் பார்வையிட்டனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில், அக்டோபர் 05 முதல் 13 வரை புத்தகத்திருவிழா கண்காட்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் புதுடில்லி, இணைந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழா துவக்க நாளில் (5.10.2019) மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, தமிழக அரசின் சாதனைகள் விளக்கிடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்படக்காட்சியினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

மேலும், இந்த புகைப்படகண்காட்சியில், தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அறிவித்து செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் புகைப்படங்களும், தமிழக அரசின் சாதனைகள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் புத்தகத்திருவிழாவிற்கு வருகைத்தரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றன. மேலும், அரசின் திட்டங்கள் எவ்வாறு பெற முடியும் என்பதையும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சிறப்பு புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

05.10.2019 முதல் 08.10.2019 வரை 4 நாட்களில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நபர்கள் புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட்டுள்ளனர். மேலும், புத்தகத் திருவிழா காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இந்த புத்தகத்திருவிழாவில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், புத்தகத்திருவிழாவிற்கு வருகைத்தரும் பொது மக்களுக்கு பொழுது போக்கு ஏற்படுத்தும் வகையில், பிற்பகல் 3.00 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும், புத்தகத்திருவிழா மைதானத்தில் உணவு அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

துவக்கநாளான 5.10. 2019 அன்று ரூ.1.64 இலட்சம் மதிப்பில் 1,739 புத்தகங்களும், 6.10.2019 அன்று ரூ.3.84 இலட்சம் மதிப்பில் 4,662 புத்தகங்களும், 7.10.2019 அன்று ரூ.3.34 இலட்சம் மதிப்பில் 3,514 புத்தங்களும், 8.10.2019 அன்று ரூ.3.49 இலட்சம் மதிப்பில் 4,127 புத்தகங்களும் என 4 தினங்களில் புத்தகத்திருவிழா கண்காட்சியில் 14,042 எண்ணிக்கையில் ரூ.12,30,295 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

6வது நாளான (10.10.2019) அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணிவரை எட்டையபுரம், எம்.பி.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களும், தூத்துக்குடி புனித சிலுவை மனையியல் கல்லூரி மாணவிகளும் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்;து, கரிசல்குயில் கிருஷ்ணசாமி அவர்களின் கரிசல் பாடல்களும், கலைமணி ராஜூ குழுவினரின் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியும், மாலை 6.00 மணியளவில் ஆதிச்சநல்லூர் - தாமிரபரணி நாகரிகம் என்ற தலைப்பில் ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்களும், தமிழர்களின் பெருமிதம் என்ற தலைப்பில் இரா.நாறும்பூநாதன் அவர்களும், நம் வாழ்க்கை நம் கையில் என்ற தலைப்பில் கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிOct 10, 2019 - 09:51:54 AM | Posted IP 162.1*****

தமிழகத்தில் அரசு என்று ஒன்று இருக்கிறதா என்ன?

தமிழ்ச்செல்வன்Oct 10, 2019 - 09:07:12 AM | Posted IP 162.1*****

சும்மா சொல்லப்புடாது! தமிழக அரசின் புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் பார்த்தார்கள்(!?) அப்படின்னு செய்தி போடுறதுக்கு ஒரு பெரிய மனசு வேணும்யா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory