» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சிக்கு வருவோம் என லட்சம்முறை கூறி விட்டார் : ஸ்டாலினை கிண்டல் செய்த அமைச்சர்

புதன் 9, அக்டோபர் 2019 7:05:03 PM (IST)

 ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது பிரச்சார உரையில் ஆட்சி மாற்றம் வரும் என தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.  அப்போது பேசியதாவது:-ஆட்சி மாற்றம் எனும் பலாப்பழத்தை காட்டி தொண்டர்களை ஸ்டாலின் வழிநடத்துகிறார். ஆனால், என்றைக்கும் அந்த பலாப்பழம் அவருக்கு கிடைக்காது. இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் ஸ்டாலின். இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு ஸ்டாலின் வர மாட்டார்.இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory