» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது கார் மோதி விபத்து: விவசாயி பரிதாப சாவு

புதன் 9, அக்டோபர் 2019 11:16:07 AM (IST)

பசுவந்தனை அருகே மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள சாயல் நாயக்கன்பட்டி கிராமம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் செல்லபாண்டி (35). விவசாயியான இவர் நேற்று கோவில்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தீத்தாம்பட்டி கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது, இதில் பலத்த காயம் அடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பசுவந்தனை  போலீசா்ர் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த கவர்னகிரி கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் பாலமுருகன் என்பவரை கைது  செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Anbu Communications
Thoothukudi Business Directory