» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகை ஒப்படைப்பு

புதன் 9, அக்டோபர் 2019 9:09:32 AM (IST)

ரயிலில் தூத்துக்குடி பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ரயில்வே போலீசார் மீட்டு உரிய பெண்ணிடம் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகள் சுமதி (30). கேரள மாநிலத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் மாற்றுத்திறளாளியான தனது கணவரை பார்க்க மகளுடன் சென்றார். பின்னர் மகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயிலில் ஏறினார். நெல்லை ரயில் நிலையம் வந்ததும், ரயிலில் இருந்து சுமதி மகளுடன் இறங்கினார். ரயில் திருச்சி நோக்கி புறப்பட்ட நிலையில், சுமதி தான் கொண்டு பைகளில், நகைகள் வைத்திருந்த பையை காணாது அதிர்ச்சியடைந்தார். அதில் செயின், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. இதையடுத்து நெல்லை ரயில் நிலைய போலீசாரிடம் சுமதி புகார் தெரிவித்தார். 

அப்போது திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.உடனடியாக வாஞ்சி மணியாச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமதி பயணம் செய்த பெட்டியில் ரயில்வே போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு நகைப்பை இருப்பது தெரியவந்தது. அதனை மீட்ட ரயில்வே போலீசார், அந்த பையை தூத்துக்குடி ரயில் நிலைய ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்ட சுமதியிடம் ரயில்வே போலீஸ் ஏட்டு செந்தூர்பாண்டி, நகைப்பையை ஒப்படைத்தார். அதனைப் பெற்று கொண்ட சுமதி, ரயில்வே போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads




CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory