» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம்

புதன் 9, அக்டோபர் 2019 7:58:05 AM (IST)

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று இரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடியில் நவராத்திரி விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் ஏறி சூரனை வதம் செய்ய புறப்பட்டார். கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், மகிஷாசூரன் உள்ளிட்ட சூரன்களை அம்மன் வதம் செய்தார். இதேபோன்று தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education




Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory