» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டரிடம் திருட்டு : வாலிபர் கைது

செவ்வாய் 8, அக்டோபர் 2019 12:22:58 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டரிடம் பணம் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிஷோர்குமார் என்பவர் பயிற்சி டாக்டராக உள்ளார். நேற்று பிற்பகல் அவர் தனது ஓய்வு அறையில் இருந்தபோது, சட்டயை கழற்றி வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றிருந்தாராம். அப்போது அறைக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருட முயன்றுள்ளார். 

இதனைப் பார்த்த டாக்டர் கிஷோர் குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்  அவரை கையும் களவுமாக பிடித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes






Thoothukudi Business Directory