» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் தசரா திருவிழா : 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

வியாழன் 26, செப்டம்பர் 2019 12:44:26 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் தசரா திருவிழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்டும் தசரா திருவிழா இந்த ஆண்டு வருகிற செப்.28ம் தேதி இரவு தூத்துக்குடியில் உள்ள வடபாகம் சந்தன மாரியம்மன் கோவில், மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் கோவில், தெப்பங்குளம் ஸ்ரீமாரியம்மன் கோவில், கீழ சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில், அண்ணா நகர் பத்திரகாளியம்மன் கோவில் உட்பட 25 கோவில்களில் மாக்காப்பு தீபாரதனையுடன் தசரா திருவிழா தொடங்குகிறது. மாலை 7 மணிக்கு அனைத்து கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொடி ஏற்றப்பட்டு தூத்துக்குடி நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். 

தசரா திருவிழா 29ம் தேதி காலை 5 மணிக்கு அனைத்து கோவில்களிலும் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்குகிறது. தினசரி மாலையில் அனைத்து கோவில்களிலும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அன்னை காட்சியளிப்பார். இரவு 8 மணிக்கு கோவில்களில் கொலுவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் - தீபாராதனைகள் நடைபெறும். 7ஆம் திருவிழாவான  அக்.5ஆம் தேதி இரவு 7மணிக்கு மகிஷாசூர ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தசரா திருவிழாவில் 10ம் நாள் திருவிழாவான அக்.8ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.  அதன் பின் இரவு அனைத்து கோவில்களிலும் அம்பாளுக்கு படைப்பு பூஜை படைத்து தீபாராதனை நடைபெறுகிறது. அக்.9ஆம் தேதி  அதிகாலை அம்பாள் சப்பரத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

அக்.10ஆம் தேதி அனைத்து சப்பரங்களும் தபசு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சிவன் கோவில் முன்பு வந்தடையும். அங்கு சங்கரராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஒவ்வோரு கோவிலிலிருந்து வரும் சப்பரத்திற்கு எதிர்சேவை தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்பு அனைத்து சப்பரங்களும் அந்தந்த கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும். சப்பரத்திற்கு முன்பு மாவிளக்கு, முளப்பாரி, ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications




Thoothukudi Business Directory