» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீட்ஸ் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு : ரூ.74 இலட்சம் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 8:19:07 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது நேர்காணலில் படித்த இளைஞர்கள் 6 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த 6 நபர்களும் நேர்காணலில் தேர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சுய தொழில் துவங்க கடன் பெற வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களுக்கு திட்ட முதலீடு ரூ.4 கோடியில் அரசு மானியமாக ரூ.74 இலட்சம் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் கதர் கிராம தொழில் ஆணையம் மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் இணைந்து 117 நபர்களுக்கு பல்வேறு தொழில்களை துவங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னதாக தொழில் வளர்ச்சியினை விரைவுப்படுத்திடவும், மேம்பாடு அடைய செய்திடவும், தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கை எளிமையாக்க தொழிற் கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமம் / மின் இணைப்பு ஒப்புதல் ஆகியவற்றை எவ்வித சிரமுமின்றி விரைந்து வழங்கிட துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் டி.கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், கிளை மேலாளர் (டி.ஜ.ஜ.சி) முருகன், மேலாளர் சிட்கோ ஆனந்த், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், உதவி இயக்குநர், (குறு, சிறு நடுத்தர தொழில்கள்) ஜெரினா, கிளை மேலாளர், இந்தியன் வங்கி தெய்வேந்திரன், ஒருங்கிணைப்பாளர், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி பாக்கிலெட்சுமி, மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் இராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

CSC Computer Education



Anbu Communications




Thoothukudi Business Directory