» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

சனி 21, செப்டம்பர் 2019 5:22:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் மகளிர் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 2019-2020 கீழ் பெற விண்ணப்பப் படிவத்தினை வருகிற 22ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைக்குச் செல்லும் மகளிர் எளிதாக சென்றுவர வசதியாக 50% (அதிகபட்சம் ரூ.25000/-) மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகன திட்டம் 2019-2020-ன் கீழ் மகளிர் இருசக்கர வாகனம் வழங்கிட அரசு அனுமதி அளித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் வாகனம் பெற்றிட விரும்பும் ஓட்டுநர் உரிமம் / பழகுநர் உரிமம் பெற்ற கீழ்க்கண்ட தகுதியுள்ள வேலைக்குச் செல்லும் மகளிர் விண்ணப்பம் செய்திட விண்ணப்பப் படிவத்தினை ஊராட்சி பகுதிகளிலுள்ள மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திலும், பேரூராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட பேரூராட்சி அலுவலகத்திலும், நகராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை 22.09.2019 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரரின் தகுதிகள் :

1. நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்

2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்

3. அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) மற்றும் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.

4. பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர் (Bank Coordinator) மற்றும் பெண் வங்கி வழிநடத்துநர்கள் (Bank Facilitator) மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்) ஆர்வலர்கள் (ASHA).

5. பயனானி அவருடைய சொந்தப் பணம் அல்லது அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குட்பட்ட பிற நிதி நிறவனங்களிலிருந்து கடன் பெறலாம். சொந்த நிதி எனில் பயனாளி வங்கிக் கணக்கிற்கும், கடன் பெற்றால் நிறுவன வங்கியின் கடன் கணக்கிற்கு மானியத் தொகை விடுவிக்கப்படும்.

6. மோட்டார் வாகனம் சட்டம 1988-ன்படி, பதிவு செய்யப்பட்ட 125CC-க்குட்பட்ட திறன் வாகனம் புகை பரிசோதனை விதிமுறைகளுக்குட்பட்டு 01.01.2018 பிறகு தயாரிக்கப்பட்ட வாகனம் வாங்கப்பட வேண்டும்.

7. மாவட்ட தேர்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகள் 45 நாட்களுக்குள் வாகனங்கள் வாங்கி உரிய ஆவணங்களுடன் (RC Book, License, Bank Account Pass Book/ Loan A/c. Details) சமர்ப்பித்து மானியத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

8. தொலைதூரப் பகுதி/ மகளிரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட பெண் (ஆதரவற்றப் பெண்கள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / மாற்றுத் திறனாளிப் பெண்கள் / 40 வயதிற்குட்பட்ட முதிர் கன்னிகள் / ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

9. இட ஒதுக்கீடு ஆதி திராவிடர்களுக்கு - 21%, பழங்குடியினர் - 1%, மாற்றுத் திறனாளிகள் - 4%, (அனைத்துப் பிரிவினர்கள்) அளிக்கப்படும்.

10. குடும்பத்தில் ஒரு மகளிருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்

வயது வரம்பு வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள் :

18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகனம் உரிமை பெற்றுள்ள பெண்கள் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்க வேண்டும்.

மனுவுடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

1. பிறந்த தேதிக்கான சான்றிதழ்

2. இருப்பிட சான்றிதழ்

3. உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகனம் உரிமம் நகல் அல்லது இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு மனு செய்துள்ளவர்கள் (LLR) நகல் (LLR) வைத்துள்ளவர்கள் தேர்வாகும் நிலையில் இருசக்கர வாகன உரிமம் நகல் சமர்பித்த பின்னரே மானியத் தொகை வழங்குவதற்குப் பரிசீலிக்கப்படும்.

4. வேலை வழங்கும் அலுவலரால் / நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ்.

5. நிறுவனத் தலைவர் / சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ்.

6. ஆதார் அடையாள அட்டை (நகல்)

7. எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள் (நகல்)

8. கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்.

9. சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர்)

10. உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (நகல்)

11. இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி (Quotation Performa Invoice)

உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory