» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர் தம்பி கொலையில் தொடர்புடைய 5பேர் குண்டர் சட்டத்தில் கைது

சனி 21, செப்டம்பர் 2019 3:44:45 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞரின் தம்பி கொலை வழக்கில் தொடர்புடைய 5பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : பாளையங்கோட்டை, கே.டி.சி நகரைச் சேர்ந்த பச்சை கண்ணன் மகன் சிவக்குமார் என்பவர் கடந்த 21.08.2019 அன்று தூத்துக்குடி தென்பாக காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 14 பேரை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கைது செய்து சிறையிலடைத்தார். 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

இதில், கைதான குற்றவாளிகளான கோரம்பள்ளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ராஜேஷ் என்ற ராஜேஷ்வரன் (29), பி.எஸ்.பி நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஜேசுபாலன் மகன் பீட்டர் என்ற அந்தோணி பீட்டர்(24), பேருரணி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மருதவேல் என்ற பப்படை(27), தூத்துக்குடி அண்ணாநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பெத்துராஜ் மகன் விக்கி என்ற விக்ணேஷ்வரன் என்ற விக்ணேஷ்குமார் (30) மற்றும் குலையன்கரிசல் கிழக்கு தெருவைச் சேர்ந்த பட்டுலிங்கம் மகன் சத்தியராஜ் (25) ஆகிய 5 பேரை 5பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டி.எஸ்.பி அறிக்கை சமர்ப்பித்தார். 

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 5பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் ராஜேஷ் என்ற ராஜேஷ்வரன், பீட்டர் என்ற அந்தோணி பீட்டர், மருதவேல் என்ற பப்படை, விக்கி என்ற விக்ணேஷ்வரன் என்ற விக்ணேஷ்குமார், சத்தியராஜ் ஆகிய 5பேரையும் தூத்துக்குடி டி.எஸ்.பி பிரகாஷ் இன்று (21.09.2019) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes







Thoothukudi Business Directory