» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உலக கடற்கரை தூய்மை பணி நாள்

சனி 21, செப்டம்பர் 2019 3:31:35 PM (IST)உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் சாரண, சாரணிய இயக்கம் சார்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பாரத சாரண, சாரணிய இயக்க மாவட்ட முதன்மை ஆணையர் ஞானகௌரி அறிவுறுத்தலின்படி ‘மன்னார் வளைகுடா தேசியபூங்கா மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தேசிய பூங்கா தூத்துக்குடி வனசரக அலுவலர் சு.ரகுவரன் வழிகாட்டுதலின்படி, துணைமண்டல அலுவலர் மன்னார் வளைகுடா உயிர்கோளம் காப்பாளர் மதன்குமார் முன்னிலையில், மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க மாவட்ட பயிற்சி ஆணையர் மற்றும் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் உலக கடற்கரை தூய்மைப் பணி நடைபெற்றது. 

மன்னார் வளைகுடா தேசியபூங்கா மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தேசிய பூங்கா தூத்துக்குடி வனவர் அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கடற்கரைபகுதியில் கிடக்கும் கழிவுகள் கடல்நீரில் கலந்து, கடல்வாழ் உயிரினங்களின் உணவாகிறது. அதன்பின் கடல்வாழ் உயிரினங்கள் மக்களுக்கு உணவாகும்போது அது மக்களை மறைமுகமாக பாதிக்கிறது. எனவே கடற்கரைப் பகுதியை நாம் சுத்தமாக வைத்திருந்து மனிதவளம் காப்போம் என்று சாரண, சாரணியர்களிடம் கூறி தூய்மைப்பணியை தொடங்கி வைத்தார். அதன்பின் வனக்காப்பாளர் சடையாண்டி, வனசரக உதவியாளர்கள் ராமசாமி, ஜேசுராஜ் ஆகியோர் சாரண, சாரணியர்களுக்கு கையுறை, மாசுபாதுகாப்பு முகமூடி ஆகியவற்றை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் அனுமதியுடன் கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் ஆலோசனையின்படி கிழக்குமண்டல சுகாதார மேற்பார்வையாளர் புதியவன, தூய்மை காவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை இயக்க உறுதிமொழியை கூற சாரண, சாரணியர்கள், பொறுப்பாசிரியர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். மாணவர்களின் தூய்மைப்பணிக்கு உறுதுணையாக இருந்தனர்.

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி, துறைமுக மேல்நிலைப்பள்ளி, சி.எம் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கேவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து 52 சாரணர்கள், 93 சாரணியர்கள 21 பொறுப்பாசிரியர்கள் கலந்துகொண்டு தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 

நிறைவாக சாரண, சாரணிய இயக்க மாவட்ட அமைப்பு ஆணையர் மற்றும் சி.எம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வள்ளியம்மாள் பங்குபெற்ற அரசு அலுவலர்களுக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும, சாரண, சாரணியர்களுக்கும் நன்றி கூறினார். தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜாண்சன்பால், மாவட்ட ஆணையர் சண்முகம் மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணர்பிரிவு) சரவணன், மாவட்ட அமைப்பு ஆணையர் தினேஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory