» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அன்னம்மாள் மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சனி 21, செப்டம்பர் 2019 1:53:45 PM (IST)தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சுருள் சங்கமானது இன்று முதலாமாண்டு மாணவிகளுக்கு வாழ்க்கையை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். 

மேலும் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட செஞ்சுருள் சங்க மாவட்ட திட்டஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பனிராஜன் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மாணவிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியை கல்லூரிஉதவிப் பேராசிரியரும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலருமான சுதாகுமாரி ஒருங்கிணைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer EducationAnbu Communications

Thoothukudi Business Directory