» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி சிறப்பு பூஜைகள் : திரளான பக்தர்கள் தரிசனம்

சனி 21, செப்டம்பர் 2019 12:16:35 PM (IST)



தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கோ பூஜையும், விஸ்பரூப தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பெருமாள் சத்தியநாராயண பெருமாள் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இதையொட்டி, கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, பிரதான பட்டர் வைகுண்ட ராமன் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam




CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory