» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை

சனி 21, செப்டம்பர் 2019 12:10:20 PM (IST)

சாத்தான்குளம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து நகை, உ்ண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பன்னம்பாறை அருகே மாசானமுத்து அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக பால் நாடார் (77) என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் நடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். நேற்று காலை கோவில் நடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவிலின் உள்ள அம்மன் கம்மல், குத்துவிளக்கு, உண்டியல் பணம் என ரூ.15ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் சத்யபாமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications




Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory