» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை: 2பேர் கைது

சனி 21, செப்டம்பர் 2019 11:51:45 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 89 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமயிலான போலீசார் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகில் மறைத்து வைத்து 2பேர், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த தாளமுத்துநகர், ஆனந்தி நகரைச் சேர்ந்த முருகன் மகன் கணேசன் (30), காமராஜ் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் சந்தனகுமார் (43) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 89மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.10ஆயிரம் ஆகும். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes


CSC Computer Education

Anbu Communications





Thoothukudi Business Directory