» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மாணவிகள் திடீர் மாயம்

சனி 21, செப்டம்பர் 2019 11:45:19 AM (IST)

காயல்பட்டனத்தில் பள்ளி மாணவியும், கோவில்பட்டியில் கல்லூரி மாணவியும் காணாமல் போனது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது. இவரது மகள் சித்திக் நமீதா (16), அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி மாலை அருகில் உள்ள தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதையடுத்து அவரது தாயார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவஆனந்த வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

கல்லூரி மாணவி மாயம்

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் சங்கீதமதி (21), அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி கல்லூரிக்குச் சென்றவர் மாலையில் வீடுதிரும்பவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில்  இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோவில் ஆடு திருட முயன்றவர்கள் கைது

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 11:41:54 AM (IST)

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory