» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜயை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

சனி 21, செப்டம்பர் 2019 11:27:25 AM (IST)

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக தான் வைத்துள்ளனர். நடிகர் விஜய் போன்றவர்களை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியது இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பிகில் பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த விவகாரத்திலும் அவர் அரசை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விரைவில் ஆன்லைன் முறையில் டிக்கெட் நடைமுறைப்படுத்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்களை அழைத்து 2 முறை பேசியுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் என்றைக்கு ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டதோ அன்றில் இருந்து அதற்கு பிறகு வரும் அனைத்து முடிவுகளும் விசாரணைக் கமிஷன் முடிவினை சார்ந்து இருக்கும். அந்த விசாரணைக் கமிஷன் என்ன பரிந்துரை செய்கிறதோ அதை நடைமுறைப்படுத்த தான் விசாரணை கமிஷனை அரசு அமைத்துள்ளது.

நடிகர் விஜயை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என்று என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டியது இல்லை. திரைப்பட நடிகராக தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக சில பரபரப்பாக பேசுகிறார்கள். நடிகரும் விஜய்யும் யாருடைய பேச்சை கேட்டு சொன்னார் என்று தெரியவில்லை. அவருடைய படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அவருடைய மனசாட்சிக்கு தெரியும். விஜய் போன்றவர்களை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியது இல்லை. மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக தான் வைத்துள்ளர்கள்.

2016 தேர்தல் மட்டுமல்ல, 2019ல் நடைபெற்ற தேர்தலிலும் இந்த ஆட்சி தொடருமா ? என்ற கேள்வி இருந்த நிலையில் 9 இடங்களில் வெற்றியைக் கொடுத்து, இந்த ஆட்சியை தக்க வைத்து மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள். நடிகர் விஜய் அந்தளவுக்கு தன்னை தானே நினைத்து கொண்டால் அது அவரது அறியாமை தான். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory