» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை: மதுரை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல்

சனி 21, செப்டம்பர் 2019 8:55:52 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை அறிக்கையை மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

சி.பி.ஐ. இயக்குனர் சார்பில் சிறப்பு குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவி, மதுரை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 300 பேரிடம் விசாரிக்கப்பட்டு, 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது, அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டப்பட்டதா, ஆயுதங்கள் வைத்திருந்தார்களா? உள்பட பல காரணங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். எனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூடு வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கிச்சூடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து, கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications



Black Forest Cakes

CSC Computer Education





Thoothukudi Business Directory