» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எரிவாயு குழாய்கள் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு

சனி 21, செப்டம்பர் 2019 8:27:41 AM (IST)

தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய்கள் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் விளை நிலங்களில் எரிவாயு பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த சமாதான கூட்டத்தின் போது விவசாய இடத்தில் குழாய்கள் பதிக்காமல் மாற்று இடத்தில் பதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பொட்டல்காடு விவசாய இடங்களில் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பலர் திரண்டனர். அப்போது எரிவாயு குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு குழாய்களை இறக்கி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் ரமேஷ்பாபு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த பகுதி கிராம மக்கள் லாரியில் இருந்த குழாய்களை இழக்க விடாமல் அந்த லாரியை திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோவில் ஆடு திருட முயன்றவர்கள் கைது

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 11:41:54 AM (IST)

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory