» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீஸ் எஸ்ஐயிடம் இருந்து மனைவியை மீட்டுத் தரக் கோரி கணவர் தர்னா போராட்டம்

சனி 21, செப்டம்பர் 2019 7:59:04 AM (IST)

போலீஸ் எஸ்ஐயிடமிருந்து தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும்  என வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தர்னாவில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், மும்மலைப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பணன் மகன்  பாலசுப்பிர மணியன்(47). தொழிலாளி. இவருக்கு  மனைவி ராமலட்சுமி(38), மகள்கள் கல்பனா தேவி(21), தங்கத் திலகவதி(19), சுவேதா(16) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.  பால சுப்பிரமணியன் நேற்று முன்தினம்  கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து , தரையில் அமர்ந்து திடீர் தர்னாவில் ஈடுபட்டார். 

அப்போது, 15.11.2018இல் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் உறவினரான ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் க.கருப்பசாமி,   எனது மனைவி ராமலட்சுமியை அழைத்துச் சென்றுவிட்டார்.  இதனிடையே, கொலை வழக்கு ஒன்றில் என்னை சேர்த்து 5.2.2019இல் போலீஸார் கைது செய்தனர். அப்போது, உதவி ஆய்வாளர் கருப்பசாமி என் வீட்டிற்குள் நுழைந்து,  26  பவுன் நகை, ரூ.18,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை  எடுத்துச் சென்றுவிட்டார்.இவ்விரு சம்பவங்களிலும் நான் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லை; இதில், கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரிடம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் பேச்சு நடத்தி,  மனு அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் மனு அளித்துவிட்டு சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory