» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் நிலையத்தில் பாட்டில் நொறுக்கும் கருவி : ரயில்வே சார்பில் அறிமுகம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 7:46:19 PM (IST)

காேவில்பட்டி ரயில் நிலையத்தில் பாட்டில் நொறுக்கும் கருவி துவக்கி வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக பாட்டில் நொறுக்கும் கருவியை மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் உயரதிகாரிகள் இன்று (20.09.2019) துவக்கி வைத்தனர்.  திருநெல்வேலி ரயில் நிலையத்தில் லெனின், மதுரை கோட்ட மேலாளர், துவக்கி வைத்தார்.  (திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பாட்டில் நொறுக்கும் இயந்திரம் ஸ்பிக் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது).

மேலும், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மூத்த கோட்ட வர்த்தக மேலாளர் பிரசன்னா, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கோட்ட வர்த்தக மேலாளர் பரத், மதுரை ரயில் நிலையத்தில் உதவி வர்த்தக மேலாளர் நிறைமதி பிள்ளைக்கனி  துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory