» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

வெள்ளி 20, செப்டம்பர் 2019 7:40:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஏரல் அருகே சிவகளை பரும்பு தெருவைச் சேர்ந்த காந்தி மகன் முத்துக்குமார் (37). இவர் மீது ஆழ்வார்திருநகரி, சாயர்புரம், சிவந்திபட்டி மற்றும் திருநெல்வேலி தாலுகா ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்குகளும், மேலும் குரும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில்  கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு குரும்பூர் காவல் நிலைய போலீஸார் முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.

இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலனுக்கு  அறிக்கை சமர்ப்பித்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி., பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் குரும்பூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு பட்டாணி, முத்துக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory