» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 தெருக்களுக்கு 1 காவலர் திட்டம் : டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி

வெள்ளி 20, செப்டம்பர் 2019 6:34:14 PM (IST)தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 காவலர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் கூறினார்.

நடிகர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் இன்று வெளியானது. இதை முன்னிட்டு தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் ஹெல்மட் இல்லாத 100 பேருக்கு இலவச ஹெல்மட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தலைமை தாங்கி இலவச ஹெல்மட்களை வாகனஓட்டிகளுக்கு வழங்கினார். தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் மாவட்ட தலைவர் ஸ்மைலின் முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்ச்சியில் 70 ஆண்கள், 30 பெண்களுக்கு இலவச ஹெல்மட்கள் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் கூறும் போது, இது போன்ற விழிப்புணர்வு சேவைகளை மற்ற அமைப்புகளும் செய்ய முன்வர வேண்டும். மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் பதவியேற்ற பிறகு மாவட்ட காவல்துறையில் பொதுமக்களின் நலனுக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

3 தெருக்களுக்கு 1 காவலர், என்ற திட்டம் மூலம் அந்த காவலர் 3 தெருக்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஆலோசனையின்படி குற்ற தடுப்பு செயல்கள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு உதவி செய்வார். காவலன் செயலி மூலம் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகள்,ஆலோசனைகளை தெரிவிக்கலாம். திருடு போன பைக்குகளை மீட்க டிராக்கிங்சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். பைக்கில் செல்கையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட கூடாது. குடிபோதை, அதிவேகத்தில் பைக்கில் செல்ல கூடாது. தங்கள் கண்முன் நடக்கும் குற்ற நிகழ்வுகளை பொதுமக்கள் 100 என்ற எண்ணுக்கு தெரியபடுத்தினால் 5 நிமிடத்தில் காவலர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் சிசில், துணைஆய்வாளர் வெங்கடேஷ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்இன்ஸ்பெக்டர் ஊர்காவல் பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

M.sundaramSep 22, 2019 - 05:48:49 AM | Posted IP 162.1*****

Well done the fans club of Thiru Surya. Congratulations. One policeman for three streets scheme is a good. It should be reviewed after one month and the progress is to be analyed with the representative of the streets. Weel done DSP. Our best wishes for your innovative schemes.

Mahendran செல்வம்Sep 21, 2019 - 11:42:58 AM | Posted IP 162.1*****

சிறப்பு.

Mahendran செல்வம்Sep 21, 2019 - 11:42:55 AM | Posted IP 162.1*****

சிறப்பு.

நாகராஜ்Sep 20, 2019 - 07:23:06 PM | Posted IP 108.1*****

இது போன்ற நல்ல பணிகள் தொடரட்டும் . வாழ்த்துக்கள் .

K.ganeshanSep 20, 2019 - 07:04:45 PM | Posted IP 162.1*****

Well done DSP சார் You are very much peoples friendly.we will support you.Thanks

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory