» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு 75 கோடி நிதி : அரசுக்கு தூத்துக்குடி மாநகராட்சி பரிந்துரை

வெள்ளி 20, செப்டம்பர் 2019 6:19:28 PM (IST)

தூத்துக்குடி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க அரசின் சிறப்பு நிதி ரூ 75 கோடி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு தூத்துக்குடி மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி எதிர் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு ஆணை பிறப்பித்தார். பல ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் சமூக ஆர்வலர் சத்யா இலட்சுமணன் சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை முகாம் அலுவலகத்தில் சந்தித்து தூத்துக்குடி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை மனு கொடுத்தார். முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அந்த மனுவை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரை செய்தது.

தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி ஒருங்கினைந்த பேருந்து நிலைய திட்டம் பற்றி சென்னை முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் சமுக ஆர்வலர் சத்யா இலட்சுமணன் ஆகியோருக்கு கீழ்கண்ட தகவலை தெரிவித்தது.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மீன்வளக் கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள தொழில் துறை புறம்போக்கு நிலத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டம் 2011-12 ன் கீழ் 1.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் காலதாமதம் ஏற்பட்டதால், மேற்கண்ட மானிய தொகையினை அரசுக்கு திரும்ப செலுத்த தெரிவிக்கப்பட்டதன் பேரில் மானிய தொகை அரசுக்கு திரும்ப செலுத்தப்பட்டது.

தற்போதைய நிலையில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு உத்தேச செலவினம் ரூ75 கோடி என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாரகராட்சி பொது நிதியில் போதிய நிதி இல்லாத காரணத்தினாலும், பல்வேறு திட்ட பணிகள் மானியம் மற்றும் கடன் பெற்று நடைபெற்று வருகிறது.   தூத்துக்குடி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய 2.8.19ல் மாரகராட்சி அரசுக்கு பரிந்துரை செய்துள்ள விபரத்தை தூத்துக்குடி மாநகராட்சி தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

பிரபுSep 21, 2019 - 12:25:26 PM | Posted IP 173.2*****

கி பி 2070 கண்டிப்பாகவரும்

என்கேSep 21, 2019 - 11:31:49 AM | Posted IP 162.1*****

இனிமேலும் tutyonline இது குறித்த செய்தி வெளியிடுவதாக இருந்தால் அது "ஒருங்கிணைந்த பேரூந்துநிலையம் பயன்பாட்டுக்கு வந்தது" என்பதாக மட்டும் இருக்கட்டும்.

ஒருவன்Sep 21, 2019 - 08:05:35 AM | Posted IP 173.2*****

ஆமா .. ஊரெல்லாம் ரோட்டை சேதப்படுத்தி , நாசமாகி , மீண்டும் குழி தோண்டி பாதாள சாக்கடை அமைத்து, காசுக்காக டெண்டர் விட்டு , கோடிக்கணக்கான கொசுக்களை உருவாக்கிய மாநகராட்சியே ... டெங்குகளின் தலைவனே .. நோயாளிகளை உருவாக்கிய மாநகராட்சியே .... நல்லா வருவீங்க ...

TN69 Govt BusSep 20, 2019 - 10:44:54 PM | Posted IP 162.1*****

2021 ல் வரும்

தமிழ்ச்செல்வன்Sep 20, 2019 - 08:51:03 PM | Posted IP 162.1*****

வரும்... ஆனா வராது....

தமிழன்Sep 20, 2019 - 07:29:56 PM | Posted IP 162.1*****

மொத்தத்தில் இது தேவை இல்லை. நகரில் சாக்கடை நீர் தேங்காமல் ஒழுங்காக சென்றால் போதும். தேவை இல்லாமல் பணத்தை விரயம் செய்யவேண்டாம் .

YAAROSep 20, 2019 - 06:35:27 PM | Posted IP 162.1*****

பஸ்ஸ்டாண்ட் வருமா வராதா????????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu Communications
Thoothukudi Business Directory