» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சவூதி அரேபியா மருத்துவமனையில் பணியிடங்கள் : செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 5:14:41 PM (IST)

சவூதி அரேபியா மருத்துவமனைக்கு மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சவூதி அரேபிய நாட்டில் ஜுபைலில் (Jubail) உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதிற்க்குட்பட்ட டிப்ளோமா/பி.எஸ்.சி படித்த ஆண் செவிலியர்கள் மற்றும் 40 வயதிற்க்குட்பட்ட இரண்டு வருட பணி அனுபவமுள்ள பி.எஸ்.சி படித்த ஆண் Physiotherapist பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.மேலும் 40 வயதிற்க்குட்பட்ட பெண் Lab Technician, X-Ray Technician, Sonography Technician மற்றும் M.D தேர்ச்சியுடன் 60 வயதிற்க்குட்பட்ட ஆண்/பெண் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்திட்டத்திற்க்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மின்னஞ்சல் [email protected] என்ற முகவரிக்கு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச்சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் 30.09.2019-க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.com மற்றும் 044-22505886 / 22500417 / 8220634389 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு நிறுவனத்தின் முகவர் எண். Rc.No.B-0821/CHENNAI/CORP/1000+/5/308/84 ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory