» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் 4பேர் கைது

வெள்ளி 20, செப்டம்பர் 2019 4:40:00 PM (IST)

விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 4 வாலிபர்கள் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குச் செவல் கிராமத்தைச் சேர்ந்த பால்வேல் மகன் சுரேஷ்குமார் (19). இவர் வேம்பாரில் உள்ள உப்பளத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது நண்பரகள் அதே ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் ராமலிங்கம் (21), பால்ராஜ் மகன் அழகுராஜா (19), கன்னிராஜபுரம் வாழைவெட்டி மகன் ராமசந்திரன் (22) ஆகிய மூவரும் சென்னையில் உள்ள கடைகளில் வேலைபார்த்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் மூவரும் ஊருக்கு வந்து சுரேஷ்குமாருடன் ஜாலியாக பொழுதை போக்கி வந்துள்ளனர். 

இந்நிலையில், சுரேஷ்குமார் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இவர்களது காதல் அந்த பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே மகளை கண்டித்துள்ளனர். இனி வேலைக்குச் செல்லவேண்டாம் என்று கூறி தடைபோட்டு, அவரை வீட்டிலேயே வைத்திருந்தனர். இதனால் சுரேஷ்குமார் காதலியை பார்க்கமுடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவரது நண்பரான ராமலிங்கம் காதலியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக்க கூறி அவரை விளாத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

காட்டுப்பகுதியில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த இளம்பெண்ணை சுரேஷ்குமார் உள்ளிட்ட 4பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அப்பெண் ஓடிச்சென்றபோது மயக்கம் அடைந்தார். காட்டுப்பகுதியில் இளைஞர்கள் ஓடிச்சென்றதை பார்த்த, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் தப்பியோடிய சுரேஷ்குமார், உள்ளிட்ட 4பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory