» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெள்ளி 20, செப்டம்பர் 2019 4:20:13 PM (IST)தூத்துக்குடி எபனேசர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய அரசின் மிக உன்னதமான சுகாதாரத்திட்டமாக திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம் விளங்குகின்றது.   உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு காசநோயாளிகள் இந்தியாவில் இருப்பதால், இந்திய பொருளாதாரம் மற்றும் அனைத்து துறைகளும் பின்னடைவு ஏற்பட காரணமாயிருக்கிறது. 2025க்குள் காசநோயற்ற தூத்துக்குடியை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இதன் பொருட்டு, இன்று மாநகராட்சி காசநோய் அலகு I சார்பில் தூத்துக்குடி எபனேசர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வைத்து காசநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திரைக்காட்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுந்தரலிங்கம் காசநோய் பற்றி எடுத்துரைக்கையில், இரண்டு வார இருமல் மாலைநேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் உடனடியாக மருத்துவ நிலையங்களை அணுகி இலவச சளிபரிசோதனை செய்திட மாணவிகள் உறுதுணையாக இருந்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

மேலும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டத்தில் ""Nikshay Poshan  Yojana” திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.500/-(சிகிச்சை காலம் முழுவதும்) ஊட்டசத்து உணவிற்காக காசநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு எபனேசர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர். திருமதி.சாந்தினி அவர்கள் தலைமை வகித்தார். மாணவிகளுக்கு காசநோய் பற்றிய வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு துணை இயக்குநர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. நுpகழ்ச்சி ஏற்பாட்டினை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திருமதி.சரண்யா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsCSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory