» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொம்மையாபுரம் கண்மாய் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 4:04:39 PM (IST)பொம்மையாபுரம் கண்மாய் தூர்வாரும் மற்றும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பொம்மையாபுரம் கிராமத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் பொம்மையாபுரம் கண்மாய் தூர்வாரும் மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்பான செய்தியாளர் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் , பொம்மையாபுரம் கண்மாயில் பழுதடைந்த 1 மற்றும் 4வது மடைகளை புதிதாக அமைக்கும் பணிகள் மற்றும் 2, 3வது மடைகளில் நடைபெற்று வரும் பழுதுபார்க்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், நடைபெற்று கொண்டிருந்த மறுகால் சீரமைத்தல், தடுப்பு சுவர் கட்டுதல், கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்தியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 37 கண்மாய்கள் சுமார் ரூ.14 கோடி மதிப்பிட்டில் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 70 சதவிதம் முடிந்துவிட்டன. மேலும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் 87 சிறுபாசன குளங்கள், 472 ஊரணிகள், குட்டைகள் தூர்வாரும் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஆயக்கட்டு விவசாயிகள் பயண்பெறும் வகையில் கண்மாய்களை சீரமைப்பு செய்தல், மதகுகளை பழுதுபார்தல், வரத்துக் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.25 லட்சம் முதல் ரூ.80 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நமது மாவட்டத்தில் ஸ்கேடு, டி.வி.எஸ். உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்கள் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி உதவியுடன் குளங்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் 15 குளங்கள் மற்றும் ஊருக்கு 100 கை திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் சிறுகுளங்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.


ஓட்டப்பிடாரம் வட்டம் பொம்மையாபுரம் கிராமத்தில் உள்ள பொம்மையாபுரம் கண்மாயில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ், மடை பழுதுபார்த்தல், கரையை பலப்படுத்துதல், வரத்து கால்வாய் தூர்வாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.43 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொம்மையாபுரம் கண்மாயில் தூர்வாரி 1,900 மீட்டர் நீளத்திற்கு கரை பலப்படுத்தும் பணிகளும், 2,000 மீட்டர் நீளத்திற்கு வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாய் தூர்வாருவதன் மூலம் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதன்மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 3,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள். நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளை விரைவாகவும், மழை காலத்திற்கு முன்னதாக முடித்து கண்மாயை நீர் நிரப்பிடும் வகையில் இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி பொறியாளர்கள் பிரியதர்ஷினி, ராஜேந்திரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு, பொம்மையாபுரம் கண்மாய் விவசாய பாசன சங்க தலைவர் ஆறுமுகப் பாண்டியன், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் அய்யாத்துரை, துணைத்தலைவர் முருகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory