» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊட்டச்சத்து மாத விழா மினி மாரத்தான் ஓட்டம் : தூத்துக்குடியில் நாளை நடைபெறுகிறது

வெள்ளி 20, செப்டம்பர் 2019 4:01:50 PM (IST)

போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி தூத்துக்குடியில் நாளை கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மினி மாரத்தான் ஓட்டம்  நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், செப்டம்பர்-2019ம் மாதம் முழுவதும் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழா "வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு” என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 21.09.2019 அன்று தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. 

மினி மாரத்தான் போட்டியை தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் காலை 7.00 மணிக்கு கொடி அசைத்து துவக்கி வைக்க உள்ளார்கள். இப்போட்டியானது வ.உ.சி கல்லூரியில் துவங்கி, தருவை விளையாட்டு மைதானத்தில் முடிவடையும். அனைத்து கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் போஷன் அபியான் விழிப்புணர்விற்கான மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கு பெறுவதற்கு 21.09.2019 அன்று காலை 6.00 மணிக்கு வ.உ.சி கல்லூரி விளையாட்டரங்கத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory