» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அக்.5-ல் புத்தக திருவிழா தொடக்கம் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 12:30:09 PM (IST)தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி தொடங்க உள்ள புத்தகத் திருவிழா தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில்  நடைபெற்றது. 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் புத்தக திருவிழா நடத்துவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது: தூத்துக்குடியில் அக்டோபர் 5 முதல் 13ம் தேதி வரை புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. தொடக்க நாள் விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். தனியார் பங்களிப்புடன் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புத்தக பதிப்பகத்தினர் அரங்கங்கள் அமைக்கின்றனர். 

இந்த புத்தக திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும், சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி சிறப்பிக்க உள்ளார்கள். புத்தக திருவிழா குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். புத்தக திருவிழா நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் வருகை தந்து பார்வையிட பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், புத்தக திருவிழாவிற்கு வருபவர்களுக்காக பல்வேறு வகையான உணவு பொருட்கள் அடங்கிய உணவு அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. வருவாய்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம் மற்றும் பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புத்தக திருவிழா நடத்தப்பட வேண்டும். இதற்கு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா( திருச்செந்தூர்), சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி), கிறிஸ்டி (கணக்கு), மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory