» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாகனம் மோதி வாலிபர் பரிதாப சாவு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 11:41:24 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செட்டியூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் சக்கையா (38). இவர் நேற்றிரவு 10 மணியளவில் தருவைகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். டேவிஸ்புரம் ரோடு, மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்கையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory