» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி - ஆட்சியர் தகவல்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:16:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தூய்மையை சேவை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ; தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்த தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் நெகிழி கழிவு இல்லா இயக்கம் (தூய்மையே சேவை 2019) - செப்டம்பர் 11ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. தூய்மையே சேவை பிரச்சாரத்தின் போது ஒருமுறை நெகிழியை பயன்படுத்துவதை  தவிர்ப்பதற்காகவும், மாற்றுப்பொருட்களை பயன்படுத்துவதற்காகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் தொடர்பாக பொதுமக்கள் தெரிந்துகொண்டு துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும்.

மேலும், ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளில் பணிபுரியும் களப்பணியாளர்களை கொண்டு 11.09.2019 முதல் 01.10.2019 வரை நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தூய்மையே சேவை பணியில் ஈடுபட வேண்டும். பள்ளி கல்வித்துறை மூலம் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தினை தூய்மைப்படுத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாடு நடத்தப்படும்போது மாணவ, மாணவியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளாஸ்டிக் சேகரிப்பு மையம் அமைத்து பிளாஸ்டிக் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் அங்கன்வாடிக்கு வருகை தரும் குழந்தைகள், தாய்மார்கள், வளர்இளம்பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை; ஏற்படுத்திட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதி, ஆதிதிராவிடர்நலவிடுதி மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறை மூலம் ஊரக பகுதிகளில் உள்ள தூய்மைக்காவலர்/ பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் இதர அரசு கட்டிடங்கள் தூய்மை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மகளிர் திட்டம் மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களை கொண்டு கண்காட்சி நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். தூய்மை சேவை திட்டத்தின்கீழ் அரசு தெரிவித்துள்ள அனைத்து பணிகளையும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து தூய்மை காவலர் பணியில் சிறப்பாக பணியாற்றிய 6 நபர்களுக்கு பாரத பிரதமரின் கடிதத்தினை மாவட்ட ஆட்சியர் வழங்கி அவர்களது பணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி),தனப்ரியா( திருச்செந்தூர்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTDAnbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory