» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆலந்தலையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் : மீனவர்கள் கோரிக்கை

வெள்ளி 20, செப்டம்பர் 2019 7:57:37 AM (IST)

திருச்செந்தூர் ஆலந்தலை கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆலந்தலை ஊர் நலக்கமிட்டித்தலைவர் தொம்மை, செயலர் ஜெயபால் கூறியது; திருச்செந்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆலந்தலை மீனவ கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீன்பிடித் தொழிலே பிரதானமான இங்கு கடல் அரிப்பினால் தொழில் பெரிதும் பாதிப்படைகிறது. இதனால் கரையோரங்களில் படகுகளை நிறுத்த முடியவில்லை. தற்போது அருகில் உள்ள கல்லாமொழியில் அனல்மின் நிலையத்திற்காக நிலக்கரி தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக கடலில் ராட்சத கற்களை கொண்டு நிரப்புவதால் அந்த தண்ணீர் ஆலந்தலை வரை வந்து விடுகிறது. இதனால் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. 

எனவே ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இப்பகுதியை பார்வையிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும், இது குறித்து தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சருடன் பேசி சட்டசபையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். ஆனால் இது வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பெரிய அளவில் ஆபத்து வரும் முன்பு தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும். இல்லாவிடில் பொதுமக்களைதிரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory