» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு

வியாழன் 19, செப்டம்பர் 2019 5:51:02 PM (IST)


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் 6 பேர் உட்பட 53 பேருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீண்குமார் அபிநபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இன்று (19.09.2019) காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி சரக துணைத் தலைவர் பிரவீண்குமார் அபிநபு தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், முன்னிலையில் காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் அறிவுரை வழங்கி, சிறப்பாக பணியாற்றிய 53 கீழ்கண்ட காவல்துறையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த 21.08.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் லோடு வேனில் கஞ்சா கடத்தியவரை கைது செய்து, வேனிலிருந்த 294 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், தலைமை காவலர்கள் ராஜ்குமார், மாரிமுத்துக்குமார், காவலர்கள் பாக்கியராஜ், சோமசுந்தரம் மற்றும் பெண் முதல் நிலை காவலர் பரணி ஆகியோரையும், கடந்த 15.09.2019 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற முருகேசன் மற்றும் விவேக் கொலை வழக்கில் சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில், அதில் ஈடுபட்ட எதிரி மாரிமுத்து என்பவரை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கக் கிருஷ்ணன், தலைமை காவலர் முத்துராஜ், காவலர்கள் பாலகுமார், மாதவன் ஆகியோரையும்,

அதே போன்று 31.08.2019 அன்று லைலா என்ற பாத்திமாவை கைது செய்து, அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தமைக்காக தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தங்கக்கிருஷ்ணன், தலைமை காவலர் திருமலைராஜன், காவலர்கள் சுந்தர் சிங், பன்னீர் செல்வம் ஆகியோரையும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணியை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் பத்திரகாளி என்ற பவுன் மற்றும் குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் ராதா ஆகியோரையும், திருடப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள டாரஸ் லாரியை மீட்டு எதிரியை கைது செய்த வழக்கில் சிறப்பாக பணியாற்றியமைக்காக விளாத்திக்குளம் காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை தலைமை காவலர்கள் சுடலைமுத்து, வடிவேல், மாடசாமி, செல்வ கிருஷ்ணன், கதிர்வேல் ஆகியோரையும்,

நிலமோசடி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்தமைக்காக காவல் ஆய்வாளர் அருள் ரோஸ் சிங், சார்பு ஆய்வாளர் நாராயணன், தலைமை காவலர் மாரிக்குமார், மாணிக்க குமார் ஆகியோரையும்,வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கு எதிரி பாக்கு அந்தோணி நீண்ட நாட்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் இருந்து வந்த பாக்கு அந்தோணியை கைது செய்தமைக்காக எஸ்.ஐ. ரவிக்குமார், தலைமை காவலர்கள் பிச்சையா, அருணாச்சலம், ராஜேஷ் ஆகியோரையும்,

மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிந்தா சரணவன் கொலை வழக்கு எதிரிகள் ஜான்சன், மதன்ராஜ் மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரை கைது செய்தமைக்காக எஸ்.ஐ. சங்கர், முதல் நிலைக்காவலர் பென்சிங் ஆகியோரையும், மற்றும் இதர வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய ஹென்சன் பால்ராஜ், ஞானராஜ், ராஜாமணி, சிவராஜன், போக்குவரத்துப்பிரிவு எஸ்.ஐ வெங்கடேசன், கோவில்பட்டி கிழக்குப்பிரிவு எஸ்.ஐ நாராயணசாமி, தலைமை காவலர்கள் பரணி, கைலயங்கிரி வாசன், பெருமாள், ஸ்ரீராம், மணிகண்டன், முருகேசன், செல்லப்பாண்டி, லெனின் கிங்ஸ்லி, கார்த்திகேயன், நம்பிராஜன், முருகன், சக்திவேல் மற்றும் பிள்ளைமுத்து ஆகியோரையும் பாராட்டினார்.

இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம் கலைக்கதிரவன், ஸ்ரீவைகுண்டம் சுரேஷ்குமார், சாத்தான்குளம் பால்துரை, விளாத்திக்கும் நாகராஜன், மணியாச்சி ஜெயச்சந்திரன், கோவிலபட்டி ஜெபராஜ், மாவட்ட குற்றப்பிரிவு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், நில மோசடி தடுப்பு பிரிவு பிரதாபன், மாவட்ட தனிப்பரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், எஸ்.ஐக்கள் உமையொருபாகம் மற்றும் கிறிஸ்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest Cakes
Thoothukudi Business Directory