» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்

வியாழன் 19, செப்டம்பர் 2019 5:39:11 PM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் "தேசிய ஊட்டச்சத்து மாதமாக” அனுசரிக்கப்பட்டு வருகின்றது. திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டத்தில் ஏற்கனவே ""Nikshay Poshan Yojana” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் காசநோயாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.500/-(சிகிச்சை காலம் முழுவதும்) ஊட்டசத்து உணவிற்காக வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இன்று மாநகராட்சி காசநோய் அலகு 2 சார்பில் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் சார்பாக காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பையினை அதன் உரிமையாளர் ஆனந்த் வழங்கினார். துணை இயக்குநர் சுந்தரலிங்கம் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவின் அவசியத்தையும் இடைவிடாத மருந்து உட்கொள்தல் காசநோயிலிருந்து விரைவாக விடுபட வழிவகுக்கும் என எடுத்துரைத்தார். மேலும் சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களுக்கு இரண்டே மணி நேரத்தில் அதிநவீன சீபிநாட் கருவி மூலம் டிபி நோய் உள்ளதா என்பதனை இலவசமாக கண்டறியலாம் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய் ஆலோசகர் மருத்துவர்.அனுபமா , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்.லலிதா சுப்ரமணியம் , தலைமை வகித்தார். நெஞ்சக நோய் பிரிவு மருத்துவர்.செந்தில் அரசு  மற்றும் காசநோய் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொரிகடலை, மக்காச்சோளம், காசம், கோதுமை, பார்லி, சம்பா, ஜவ்வரிசி, தினை, பாதாம், முந்திரி, ஏலக்காய், சோயா பாக்கெட், பாசிப்பயிறு- கம்பு-160 ப, கேப்பை, வெள்ளைச்சோளம், புட்டு அரிசி, வேர்க்கடலை ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory