» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் - லாரி மோதல்: தீயணைப்பு வீரர் பரிதாப சாவு

வியாழன் 19, செப்டம்பர் 2019 4:16:40 PM (IST)

தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தீயணைப்பு வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் அழகர் மகன் மகேந்திரன் (22). ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று பிற்பகலில் அலுவல் தொடர்பாக தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடி வந்துள்ளார். பின்னர், ஓட்டப்பிடாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் புதூர் பாண்டியுரம் விலக்கில் திரும்பும்போது தூத்தக்குடி துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்டய்னர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory