» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒன் ஸ்டாப் சென்டரில் காலிப் பணியிடம்: அக்.5க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

வியாழன் 19, செப்டம்பர் 2019 3:43:43 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், "ஒன் ஸ்டாப் சென்டரில் காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் 04.10.2019-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் "ஒன் ஸ்டாப் சென்டர் (ழுநெ ளுவழி ஊநவெசந)யில் ஊயளந றுழசமநச காலிப்பணியிடத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியான நபர்கள் தங்கள் சுய விவரங்களுடன் 04.10.2019-க்குள் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Case Worker தகுதி மற்றும் அனுபவம்:

Case Worker இளநிலை பட்டம், ஆலோசனை உளவியல் அல்லது வளர்ச்சி முகாமைத்துவம் போன்ற படிப்புகளுடன் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான நிறுவனத்தில் அரசு அல்லது அரசுசாரா நிறுவனத்தில் அல்லது பெண்கள் சார்ந்த முன்னுரிமைத் திட்டத்தில் அல்லது பெண்கள் ஆலோசனை மையத்தில் 1 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பெண் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி தொடர்பான பயணப்படி வழங்கப்படும். உள்ளுரில் வசிப்பவர்க்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். 

மாத சம்பளம்: ரூ.12,000/- நிரப்பப்படாத பணியிடம்: 1

மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101. தொலைபேசி எண்: 0461 2325606 என்ற முகவரியை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes
Thoothukudi Business Directory