» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் : உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வியாழன் 19, செப்டம்பர் 2019 3:34:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்ள 26.09.2019 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்ள 26.09.2019 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நரிக்குறவர் நல வாரியத்திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பதிவினை புதுப்பித்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம் 26.09.2019 அன்று பிற்பகல் 3:00மணி முதல் 5:00மணி வரை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. 

இம்முகாமில் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்பவர்கள் 18 வயது பூர்த்தி செய்தும், 60 வயதிற்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். ஏற்கனவே அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் பதிவினை; புதுப்பித்துக் கொள்ள கட்டணம் தேவையில்லை. இருப்பிடம் மாறினால் புதிய முகவரியை வாரியத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தவர்களுக்கு விபத்து நிவாரணத் தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச் சடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகிய விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் வழியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நலத்திட்ட உதவிகள் பெற உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பித்து வருவது அவசியமாகும். எனவே இம்முகாமினை பயன்படுத்தி அடையாள அட்டையினை புதுப்பிக்காதவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் புகைப்படத்துடன் கூடிய ஆளறிச் சான்று மற்றும் ஒரு புகைப்படத்துடன் புதுப்பித்துக் கொள்வதுடன் புதியதாக அடையாள அட்டை பெறுவதற்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsCSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory