» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் பணியிடங்கள் : அக்.4க்குள் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

வியாழன் 19, செப்டம்பர் 2019 12:43:15 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ் பணிபுரிய மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு 04.10.2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தன்னார்வ குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமான மகிளா சக்தி கேந்திரா (Mahila Shakti Kendra) திட்டம் செயல்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தின்கீழ் பணிபுரிய மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான நபர்கள் கீழ்கண்ட பணியிடங்களுக்கு தங்கள் சுய விவரங்களுடன் 04.10.2019-க்குள் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மகளிர் நல அலுவலர்:

தகுதி மற்றும் அனுபவம்:

மகளிர் நல அலுவலர் பணியிடத்திற்கு மனித நேயம் மற்றும் சமூகவியல் பாட பிரிவு மற்றும் சமூகபணி முதுகலை பட்ட படிப்புடன் (ஆளுறு) பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முன் அனுபவமும் சமுதாய அமைப்புகளில் பணிபுரிந்த அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி தெரிந்து இருத்தல் வேண்டும். இப்பணிக்கு 35 வயதிற்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

மாத சம்பளம்: ரூ.35,000/- மொத்த பணியிடம்: 1(ஒன்று)

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்:

தகுதி மற்றும் அனுபவம்:

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு மனித நேயம் மற்றும் சமூகவியல் பாட பிரிவு சமூகபணி இளநிலை பட்ட படிப்பு(ஆளுறு) அல்லது சமூகவியலில் முதுகலை பட்ட படிப்பு அல்லது உளவியல் தொடர்பான பட்ட படிப்புடன் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும். இப்பணிக்கு 35 வயதிற்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

மாத சம்பளம்: ரூ.20,000/- மொத்த பணியிடம்: 2(இரண்டு)

மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101. தொலைபேசி எண்: 0461 2325606 என்ற முகவரியை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications
Nalam PasumaiyagamThoothukudi Business Directory