» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தம்

வியாழன் 19, செப்டம்பர் 2019 11:14:45 AM (IST)

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் இன்று 2ஆயிரம் லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகப்படியான அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) ஒரு நாள் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது. அதன்படி இன்று தூத்துக்குடியில் இன்று 2ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை.  

லாரி ஸ்ட்ரைக் குறித்து தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.பி. ஜெகன் கூறுகையில், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் இன்று லாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகளில் எந்தவித பாதுப்பும் இல்லை என்று தெரிவித்தார்.. 

தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் அசோசியேஷன் தலைவர் சுப்புராஜ் கூறுகையில், ஏற்கனவே முக்கியமான தொழிற்சாலைகள் இயங்காததால் லாரி தொழில் மோசமான நிலையில் முடங்கியுள்ளது. இன்று லாரி ஸ்ட்ரைக் காரணமாக வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரிகள் அனைத்தும் லாரி செட்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள் இறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இன்று புக்கிங் செய்யப்படவில்லை. இன்று நள்ளிரவு முதல் லாரிகள் வழக்கும்போலல் இயக்கபடும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory