» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருவிழாவில் பெண்ணிடம் 7பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை

வியாழன் 19, செப்டம்பர் 2019 11:10:41 AM (IST)

நாகலாபுரம் அருகே கோவில் திருவிழாவில் பெண்ணிடம் 7பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் அருகேயுள்ள பள்ளிவாசல்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மனைவி அன்னத்தாய். இவர் நேற்று முன்தினம் இரவு நாகலாபுரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர் கழுத்தில அணிந்திருந்த 7 பவுன் தாலிச் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுவிட்டாராம். இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education



Black Forest Cakes





Thoothukudi Business Directory