» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாப சாவு

வியாழன் 19, செப்டம்பர் 2019 10:58:19 AM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து சுவரில் தூக்கி வீசப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அண்ணாநகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் காதர் அகம்மது. இவரது  மனைவி நபிலா (39). கணவன்-மனைவி இருவரும் வீட்டில் சம்சா தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இன்று காலை 5.30 மணியளவில நபிலா தனது வீட்டில் வெங்காயம் வெட்டும் இயந்திரம் மூலம் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தாராம். 

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சுவரில் மோதியதால் அவரது தலையில் பலத்த ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளர். ஆனால் மருததுவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes




Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory