» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடையன்விளை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!!

வியாழன் 19, செப்டம்பர் 2019 10:13:03 AM (IST)நாசரேத் அருகிலுள்ள இடையன்விளை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள இடையன்விளை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 130-வது ஆண்டு திருவிழா கொடியேற்றம் குரும்பூர் பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் சிங்கித்துரை பங்குத்தந்தை சில்வெஸ்டர் முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம்  பங்குத்தந்தை மரியவளன் கொடிற்றினார். திருவிழா காலங்களில் தினமும் காலை 7 மணிக்கு நவநாள் திருப்பலி நடை பெறுகிறது. வருகிற 25ம் தேதி புதன்கிழமை  8 ஆம் திருவிழாவன்று மாலை 3 மணி முதல் மணி வரை ஊர் மக்கள்,வெளியூர்மக்களுக்காக பரிந்துரைஜெபம் நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு சிவகங்கை மறை மாவட்டம் டிவைன் தியான இல்லம் இயக்குனர் மரியலூயிஸ் தலைமையில் ஜெப ஆராதனை, மறையுரை, நற்கருணை ஆசிர் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் ஆலய நிர்வாகிகள் தலைவர் தனிஸ்லாஸ் ஆபிரகாம், செயலாளர் பாரத் ரத்தினகுமார், பொருளாளர் புன்னியனாதன், திருவிழா கமிட்டி தலைவர் இருதயராஜா, செயலாளர் கிங்ஸ்டன்,  பொருளாளர் கிளிக்குமார், சென்னை பொறுப்பாளர் வின்சென்ட் சிங்கராயன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory