» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீரதீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு தேசிய விருது : ஆட்சியர் தகவல்

வியாழன் 19, செப்டம்பர் 2019 9:01:45 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரதீர செயல் புரிந்த 6 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ICCW-ன் 2019 தேசிய விருதுக்காக 04.10.2019க்குள் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன –

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2019ம் ஆண்டிற்கான சமூக கொடுமையை எதிர்த்து உயிரையும் துச்சமென மதித்து உடல்ரீதியான இன்னல்களையும் தாண்டி தன்னலமற்று துணிச்சலுடன் வீரதீர செயல் புரிந்த 6 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ICCW-ன் 2019 தேசிய விருதுக்கான விருது, பாராட்டு பத்திரம் மற்றும் காசோலை மேலும் கல்வி ஊக்கத் தொகை வழங்கிடும் பொருட்டு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுடையவர்கள் இது தொடர்பான விண்ணப்பத்தினை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 04.10.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதுதொடர்பான தகவல்களை பெற மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 (phone: 0461-2325606) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory