» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்

வியாழன் 19, செப்டம்பர் 2019 8:32:09 AM (IST)



வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்தும், மழைநேரத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மழைக்காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சிறிய அளவு கூட தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூர் கோயில் கந்தசஷ்டி விழா மற்றும் குலசை தசரா திருவிழாவின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி. சண்முகநாதன், பி. சின்னப்பன் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த போராட்டத்தை ரத்து செய்திருப்பது எதிர்பார்த்ததுதான். கேந்திரிய வித்யாலயம் பள்ளிகளில் தங்களுக்கான ஒதுக்கீட்டை வேண்டாம் என திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதுவரை சொல்லவில்லை. இதன் மூலம் மறைமுகமாக ஹிந்தியை படிக்க ஊக்குவித்தவர்கள் திமுகவினர்தான் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes



CSC Computer Education



Thoothukudi Business Directory