» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரே குடும்பத்தில் 4பேரை வெட்டிய வழக்கில் 2பேர் கைது

வியாழன் 19, செப்டம்பர் 2019 8:30:17 AM (IST)

ஆறுமுகனேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த கோபால் மகன் கோவிந்தசாமி (28). கேரளத்தில் சிப்ஸ் கடை நடத்திவரும் இவர், ஆறுமுகனேரியில் ஓராண்டுக்கு முன்பு புதிய வீடு கட்டியுள்ளார். கேரளத்தில் இப்போது சீசன் இல்லாததால் இங்குள்ள வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், புதிய வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை எனக் கூறி, இவரது உறவினர் முத்துராஜ் (20) கடந்த 15ஆம் தேதி கோவிந்தசாமியுடன் தகராறு செய்தாராம். இந்நிலையில், அன்றைய தினம் இரவு கோவிந்தசாமியின் வீட்டுக்குள் 5 பேர் புகுந்து, அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். 

தடுக்க முயன்ற அவரது அண்ணன் வெங்கடசாமி (30), அவரது சகோதரி விஜயா (40), விஜயாவின் மருமகன் செல்லத்துரை (28) ஆகியோருக்கு தலை, கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த 4 பேரும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, பாரதிநகரைச் சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கர், அவரது சகோதரர்கள் செல்லக்குட்டி, சின்னத்தம்பி, அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் மகன் முத்துராஜ், குமார் ஆகியோரை ஆறுமுகனேரி போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், சு. முத்துராஜ், குமார் ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், 3 பேரைத் தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesThoothukudi Business Directory